திங்கள், 2 நவம்பர், 2009


சதுரகிரி மலை ஒரு தென்கையிலை








சதுரகிரி புனித பயண மேல் கொள்வோர்களுக்கு ஒரு சிறு அறிவுரை . தங்கள் மேற்கொள்ளும் பயணத்தின் போது பிளாஸ்டிக் பொருள்கள் மேலே கொண்டு செல்ல வேண்டாம். தவிர்க்க முடியாத காரணுங்களுக்காக கொண்டு செல்பவர்கள் எப்படி கொண்டு சென்றோமோ அதே போல் திரும்பவும் மலை அடிவாரத்தில் கொண்டு வந்து சேர்த்து விடுங்கள் . எனக்கு தெரிந்து தற்சமயம் சுத்தமா உள்ள மலை. அதுவும் சித்தமாக உள்ள மலையாகவும் உள்ளது சதுரகிரி மலை . இங்கு அதிகமான மூலிகை உள்ளது. அந்த மூலிகை தாவரங்களை காப்பது நமது கடமை இதை செய்தலே இறைவனிஇன் திருவருளை நாம் முறையாக பெற்று விடலாம். விநாயகர் ஈசனிடம் மாம்பழம் பெற்றுகொண்டது pola.







சரி இனி நாம் சதுரகிரி செல்வது எப்படி என்று தெரிந்து கொள்வோம் . அதற்கு தானிப்ப்பாறை வழி தான் மிகவும் சிறந்தது வெளியூர் அன்பர்களுக்கு வடதமிழ் நாட்டு அன்பர்களுக்கு மதுரை மாநகரிலிருந்து ராஜபாளையம் தென்காசி குற்றாலம் செங்கோட்டை போகும் பஸ்களில் ஏறி கிருஷ்ணன் கோவில் என்ற இடத்தில இறங்கவும் .(கிருஷ்ணன் கோவில் ஸ்ரீவில்லிபுத்தூர் கு அருகில் உள்ளது ) அங்கிரிந்து வட்திராயிருப்பு க்கு செல்லவும் (கிருஷன் கோவிலி இருந்து வட்திராயிருப்பு பத்து கிலோ மீட்டர் ஆட்டோ வும் கிடைக்கும் )வட்திராயிருப்பு செண்டறவுடன் அங்கிருந்து தாணிப்பாறை செல்லவும் (தாணிப்பாறை பத்து கிலோ மீட்டர் ) வசதி உள்ளவர்கள் கிருஷ்ணன் கோவிலில் இருந்து தானிப்பாரைக்கு ஆட்டோ பிடிக்கலாம் (நூற்றி ஐம்பது ரூபாய் வரும் கேட்பார்கள்)



மலை அடிவாரத்தில் இருந்து ஏழு கிலோ மீட்டர் இறைவனின் திருவடியை நாம் அடைய .

அடிவாரத்தில் இருந்து மழைக்கு கோவிலுக்கு சென்று அடையும் வரை குடிநீர் கிடைப்பது கொஞ்சம் அரிது. ஆகையால் தாங்கள் குடிநீர் பாட்டில்கள் குறைந்த பட்சம் ஒருவருக்கு மூன்று லிட்டர் தண்ணி தேவை படும் . அப்புறம் சிறுது உடலுக்கு சக்தி கொடுக்க கூடிய உணவு பண்டங்கள் எடுத்து செல்லலாம் . அதிலும் குறிப்பாக ப்லாசிடிக் கவர் இல்லாத தாக பார்த்து கொள்ளுங்கள் . மலை ஏற புதியவர்களுக்கு மூன்று அல்லது நான்கு மணி நேரங்கள் பிடிக்கும் . குறிப்பாக உடல் எடை அதிகம் உள்ளவர்கள் பாடு கொஞ்சம் சிரமம் தான் ,



மலை ஏறும் பாதை கொஞ்சம் கரடு முரடாகத்தான் இருக்கும் அதற்ர் காக பயப்பட தேவை இல்லை இறைவன் இருக்கிறான் வழி நடத்தி செல்ல .



அதிகாலை ஐந்து முப்பது மணிக்கு மேலே மலை ஏற ஆரம்பித்தால் எப்படயும் காலை ஒன்பது முப்பது மணிக்கு இறைவனை பார்த்து விடலாம் .மலை மேல தயவு செய்து ஷோவ்ப்பு சாம்ப்பூ போன்ற வற்றை உபயோக படுத்த வேண்டாம் . சதுரகிரி சென்றால் நாமும் இயற்கையுடனே வாழ்ந்து வர வேண்டும் . தயவுசெய்து செயற்கை பொருட்களை உபயோகம் செய்ய வேண்டாம் . பொன் முட்டை இடும் வ்வாத்தை ஒரு நாளில் அறுத்து பார்ப்பது போல நாம் அங்கு செயற்கை பொருகளை உபயோக படுத்துவது .



சரி மேல சென்ற பின் அங்கு என்ன உள்ளது . எல்லாமே உள்ளது . உங்கள்கு என்ன வேண்டும் பணம் பந்தம் பாசம் கொடுமைக்காரர்கள் த்ரோவ்கிகள் நன்றிகட்டவர்கள். இவர்கள் இருக்க மாட்டார்கள் . அன்பே உருவான சுந்தர மகா லிங்கமும், சந்தன மகா லிங்கமும் , சந்தன மாதேவி இவர்களும் இருபார்கள் . வெளி உலகத்தை இவர்கள் அன்பால் மறந்து விடுவீர்கள் . சுந்தர மகாலிங்கம் திருவடியிலே சுந்தர மூர்த்தி இயும் உள்ளார் . அங்கு சென்று இரண்டு நாள் தங்கி வாருங்கள் அங்கு உள்ள மூலிகை காற்று உங்கள் மேனியில் பட்டாள் . உங்களது வியாதிகள் தீரும் . ஆயுளும் கூடும் . நிறைய மூலிகைகள், உள்ளன , மலையின் பாது காப்பு கருதி அதை எல்லாம் வெளியிட முடிய வில்லை ஆனால் அந்த காற்று பட்டாலே உங்களது வியாதிகள் தீரும் என்பது . மகாலிங்கத்தின் வாக்கு .



செல்போன் அங்கு செயல் படாது . அங்கு மின்சாரம் கிடையாது . ஒரு சில கடைகள் உள்ளன ஆனால் நீங்கள் எதிர் பார்க்கும் அளவு கிடைக்குமா என்பது சந்தேகம் . அங்கு இலவச உணவு விடுதியில் இலவசமாக உணவு கிடைக்கும் . அந்த உணவும் மலை ஏறி வரும் அன்பர்களுக்கு பசிக்கு மட்டும் தான் . ருசிக்கு இல்லை .



ஒரு முறை சென்று தரிசனம் செய்து வாருங்கள் மகாலிங்க பெருமானை உள்ளன்போடு உருகி வழிபடுங்கள் . மறுபிறவி எய்தா நிலை வேண்டும் . தவறி மறுபிறவி உண்டு என்றால் உன்னை மறவா நிலை வேண்டும் . என்று கேளுங்கள் . உங்களுக்கு என்ன தேவை, என்பதை அவன் அறிவான் . கட்டாயம் . உங்களுக்கு தக்க சமயத்தில் கொடுப்பான் . தாய் தன் குழந்தை அழுவதை வேடிக்கை பார்க்க மாட்டாள் . அது போல அங்கு உள்ள சந்தன மாதேவி தயார் நமது தந்தையிடம் போராடி நமக்கு வேண்டிய வரங்களை கட்டாயம் பெற்று தருவாள் . நம்பிகையூடு மகா லிங்கத்தை தரிசியுங்கள் . வாழ்க்கையில் பிறவா நிலை எய்துங்கள் . மேலும் தங்களுக்கு விவரங்கள் தேவை என்றால் 9944494045, 9976642060, இந்த எண்ணிற்கு தொடர்ப்பு கொள்ளுங்கள் தேவையான விவரங்கள் கிடைக்கும் . இன்னும் சதுரகிரி பற்றிய விவரங்கள்

3 கருத்துகள்:

Manohar சொன்னது…

சதுரகிரி பற்றி நிறைய படித்திருக்கிறேன், தங்கள் கருத்துக்கள் சற்று வித்தியாசமாகவும்,சிறப்பாகவும் உள்ளது. அடுத்த முறை இந்தியா வரும் போது கண்டிப்பாக உங்கள் குழுவுடன்தான் மகாலிங்கம் தரிசனம்.

உங்கள் முயற்சிக்கு வழ்த்துக்கள்

மனோ

Unknown சொன்னது…

nandri manogar thankal karuthuraikku thankaluku melum athikapadiyaana thagavalkal venum endraal www.sathuragirisundaramahalingam.blogspot.com
www.ssathuragirisanthanamahalingam.blogdpot.com

SOUTH INDIAN CATERING சொன்னது…

Excellent and no words to express my thanks. You are also like Narayan krishnan of Akshaya madurai. He is feeding the hunger and you are guiding us to attain the blessings of the almighty. keep up your good work. ilanchezhian s dearilan@hotmail.com

கருத்துரையிடுக