புதன், 18 நவம்பர், 2009

சதுரகிரிக்கு நான் ஐயப்பன் மற்றும் பிரதீப் ,ஸ்ரீனிவாசன் சென்ற பொழுது எடுத்த புகை படங்கள்


இது வெள்ளை விநாயகர் உள்ள இடம் . இவ்ளோ பெரிய உருவத்தில் வெள்ளை விநாயகர் உரு கொண்டு உள்ளார்
இது தியான பாறை வெள்ளை விநாயகருக்கு மேல் உள்ளது .
நான் மற்றும் பிரதீப் மற்றும் ஸ்ரீனிவாசன் சார் அவர்களும்
ஐயப்பன் பிரதீப் நான்

ஐயப்பன் மொட்டை போடும் முன் எடுத்தது பிரதீப் அவருக்கு பினால் நான்

பிரதீப் ஸ்ரீனிவாசன் சார் நான்
அய்யப்பன்
பிரதீப் ஸ்ரீனிவாசன் மற்றும் நான்


இவரை பற்றி கொஞ்சம் பெரிய விளக்கம் கொடுக்க வேண்டும் , இவர் தன் பல மனிதர்களுக்கு வழிகாட்டி , இவருக்கு சதுகிரி யில் வாழும் பளியர் இன சிறுவர்கள் வைத்திருக்கு பெயர் "சொட்டை " , இவர் இல்லாமல் நான் சதுர கிரியில் மற்ற பகுதிகளுக்கு நான் செல்வதில்லை , சொட்டை இல்லாமல் சென்றால் போர் அடிக்கும் , அப்புறம் சொட்டையும் கூட வந்தால் நமக்கும் ஒரு பாதுகாப்பு , சொட்டை ,கரடி மற்ற வன விலங்குகள் இருந்தால் முதலிலேயே நமக்கு உசார் படுத்தி விடுவான் , சொட்டைகும் தோழர்கள் பெண் நண்பிகள் உண்டு , அவர்கள் பெயர் "பச்சை கிளி " மற்றும் "செவாழை " மற்றம் இன்னும் சில் பைரவர்கள் உண்டு பெயர் தெரிய வில்லை எனக்கு இவர்கள் அங்கு வரும் பக்தர்களுக்கு பாதுகாப்பு அரணாக உள்ளார்கள் ,

சதுரகிரி மகாலிங்கம் அறிய புகை படம் இது



இந்த புகை படம் மிக அரிதாக ஒரு நண்பருடைய வலை தளத்தில் கிடைத்தது .


இது எப்பொழுது எட்துதது என்று தெரியவில்லை , ஆனாலும் புகைப்படம் அருமையாக உள்ளது .
கருப்பு வெள்ளை புகை படங்கள் 1980 களிலே இருந்து கொஞ்சம் கொஞ்சம் மாக மறைந்து விட்டது எனக்கு தெரிந்து எழுபதுகளில் இந்த புகை படம் எடுத்திருக்கக் வேண்டும் .


www.sathuragirisundaramahalingam.blogspot.com

sathuragirisanthanamahalingam.blogspot.com

புதன், 4 நவம்பர், 2009

101_0204.JPG - Gmail

101_0204.JPG - Gmail















ipperiyavar sathuragiri adikadi vanthu sellum anbar enna oru vadivaana thotram paarunkal

செவ்வாய், 3 நவம்பர், 2009

சதுரகிரி பக்தர் குழு

ஆன்மீக அன்பர்களே ,



சதுரகிரி செல்லும் பக்தர்கள் உலகில் எங்கிருந்தாலும் இந்த வெப் சைட் இல் ஒஉர் குழு வாக சேருங்கள் , நீங்கள் செல்ல விரும்பும் நேரம் மற்றும் தேதியை குறிபிட்டால் உங்களுடன் மற்றவர்களும் சந்தித்து உங்களுக்குள்ளாகவே ஒரு ஒரு குழு வாய் உருவாக்கி நீங்கள் சென்று வரலாம் , காரணம் இதில் மலையின் சிறப்பம்சம் தெரியாத அன்பர்கள் நிறைய பேர் இருப்பார்கள் அவர்கள் , இவர்களுடன் இணைந்தால் பயணம் இனிதாக அமையும் அதற்காகவே இந்த வலைத்தளம் உதவ வேண்டும் ,
பக்தர் களின் யாத்திரை இனிதாக அமைய இதில் இந்த வலைதளைதை பின் தொடருங்கள் உங்கள் கருத்துக்களை பரிமாரிகொல்லுங்கள் நன்றி என்றும் அன்புடன்


ந.ல.பிரபாகரன்
9944494045,9597710769

திங்கள், 2 நவம்பர், 2009


சதுரகிரி மலை ஒரு தென்கையிலை








சதுரகிரி புனித பயண மேல் கொள்வோர்களுக்கு ஒரு சிறு அறிவுரை . தங்கள் மேற்கொள்ளும் பயணத்தின் போது பிளாஸ்டிக் பொருள்கள் மேலே கொண்டு செல்ல வேண்டாம். தவிர்க்க முடியாத காரணுங்களுக்காக கொண்டு செல்பவர்கள் எப்படி கொண்டு சென்றோமோ அதே போல் திரும்பவும் மலை அடிவாரத்தில் கொண்டு வந்து சேர்த்து விடுங்கள் . எனக்கு தெரிந்து தற்சமயம் சுத்தமா உள்ள மலை. அதுவும் சித்தமாக உள்ள மலையாகவும் உள்ளது சதுரகிரி மலை . இங்கு அதிகமான மூலிகை உள்ளது. அந்த மூலிகை தாவரங்களை காப்பது நமது கடமை இதை செய்தலே இறைவனிஇன் திருவருளை நாம் முறையாக பெற்று விடலாம். விநாயகர் ஈசனிடம் மாம்பழம் பெற்றுகொண்டது pola.







சரி இனி நாம் சதுரகிரி செல்வது எப்படி என்று தெரிந்து கொள்வோம் . அதற்கு தானிப்ப்பாறை வழி தான் மிகவும் சிறந்தது வெளியூர் அன்பர்களுக்கு வடதமிழ் நாட்டு அன்பர்களுக்கு மதுரை மாநகரிலிருந்து ராஜபாளையம் தென்காசி குற்றாலம் செங்கோட்டை போகும் பஸ்களில் ஏறி கிருஷ்ணன் கோவில் என்ற இடத்தில இறங்கவும் .(கிருஷ்ணன் கோவில் ஸ்ரீவில்லிபுத்தூர் கு அருகில் உள்ளது ) அங்கிரிந்து வட்திராயிருப்பு க்கு செல்லவும் (கிருஷன் கோவிலி இருந்து வட்திராயிருப்பு பத்து கிலோ மீட்டர் ஆட்டோ வும் கிடைக்கும் )வட்திராயிருப்பு செண்டறவுடன் அங்கிருந்து தாணிப்பாறை செல்லவும் (தாணிப்பாறை பத்து கிலோ மீட்டர் ) வசதி உள்ளவர்கள் கிருஷ்ணன் கோவிலில் இருந்து தானிப்பாரைக்கு ஆட்டோ பிடிக்கலாம் (நூற்றி ஐம்பது ரூபாய் வரும் கேட்பார்கள்)



மலை அடிவாரத்தில் இருந்து ஏழு கிலோ மீட்டர் இறைவனின் திருவடியை நாம் அடைய .

அடிவாரத்தில் இருந்து மழைக்கு கோவிலுக்கு சென்று அடையும் வரை குடிநீர் கிடைப்பது கொஞ்சம் அரிது. ஆகையால் தாங்கள் குடிநீர் பாட்டில்கள் குறைந்த பட்சம் ஒருவருக்கு மூன்று லிட்டர் தண்ணி தேவை படும் . அப்புறம் சிறுது உடலுக்கு சக்தி கொடுக்க கூடிய உணவு பண்டங்கள் எடுத்து செல்லலாம் . அதிலும் குறிப்பாக ப்லாசிடிக் கவர் இல்லாத தாக பார்த்து கொள்ளுங்கள் . மலை ஏற புதியவர்களுக்கு மூன்று அல்லது நான்கு மணி நேரங்கள் பிடிக்கும் . குறிப்பாக உடல் எடை அதிகம் உள்ளவர்கள் பாடு கொஞ்சம் சிரமம் தான் ,



மலை ஏறும் பாதை கொஞ்சம் கரடு முரடாகத்தான் இருக்கும் அதற்ர் காக பயப்பட தேவை இல்லை இறைவன் இருக்கிறான் வழி நடத்தி செல்ல .



அதிகாலை ஐந்து முப்பது மணிக்கு மேலே மலை ஏற ஆரம்பித்தால் எப்படயும் காலை ஒன்பது முப்பது மணிக்கு இறைவனை பார்த்து விடலாம் .மலை மேல தயவு செய்து ஷோவ்ப்பு சாம்ப்பூ போன்ற வற்றை உபயோக படுத்த வேண்டாம் . சதுரகிரி சென்றால் நாமும் இயற்கையுடனே வாழ்ந்து வர வேண்டும் . தயவுசெய்து செயற்கை பொருட்களை உபயோகம் செய்ய வேண்டாம் . பொன் முட்டை இடும் வ்வாத்தை ஒரு நாளில் அறுத்து பார்ப்பது போல நாம் அங்கு செயற்கை பொருகளை உபயோக படுத்துவது .



சரி மேல சென்ற பின் அங்கு என்ன உள்ளது . எல்லாமே உள்ளது . உங்கள்கு என்ன வேண்டும் பணம் பந்தம் பாசம் கொடுமைக்காரர்கள் த்ரோவ்கிகள் நன்றிகட்டவர்கள். இவர்கள் இருக்க மாட்டார்கள் . அன்பே உருவான சுந்தர மகா லிங்கமும், சந்தன மகா லிங்கமும் , சந்தன மாதேவி இவர்களும் இருபார்கள் . வெளி உலகத்தை இவர்கள் அன்பால் மறந்து விடுவீர்கள் . சுந்தர மகாலிங்கம் திருவடியிலே சுந்தர மூர்த்தி இயும் உள்ளார் . அங்கு சென்று இரண்டு நாள் தங்கி வாருங்கள் அங்கு உள்ள மூலிகை காற்று உங்கள் மேனியில் பட்டாள் . உங்களது வியாதிகள் தீரும் . ஆயுளும் கூடும் . நிறைய மூலிகைகள், உள்ளன , மலையின் பாது காப்பு கருதி அதை எல்லாம் வெளியிட முடிய வில்லை ஆனால் அந்த காற்று பட்டாலே உங்களது வியாதிகள் தீரும் என்பது . மகாலிங்கத்தின் வாக்கு .



செல்போன் அங்கு செயல் படாது . அங்கு மின்சாரம் கிடையாது . ஒரு சில கடைகள் உள்ளன ஆனால் நீங்கள் எதிர் பார்க்கும் அளவு கிடைக்குமா என்பது சந்தேகம் . அங்கு இலவச உணவு விடுதியில் இலவசமாக உணவு கிடைக்கும் . அந்த உணவும் மலை ஏறி வரும் அன்பர்களுக்கு பசிக்கு மட்டும் தான் . ருசிக்கு இல்லை .



ஒரு முறை சென்று தரிசனம் செய்து வாருங்கள் மகாலிங்க பெருமானை உள்ளன்போடு உருகி வழிபடுங்கள் . மறுபிறவி எய்தா நிலை வேண்டும் . தவறி மறுபிறவி உண்டு என்றால் உன்னை மறவா நிலை வேண்டும் . என்று கேளுங்கள் . உங்களுக்கு என்ன தேவை, என்பதை அவன் அறிவான் . கட்டாயம் . உங்களுக்கு தக்க சமயத்தில் கொடுப்பான் . தாய் தன் குழந்தை அழுவதை வேடிக்கை பார்க்க மாட்டாள் . அது போல அங்கு உள்ள சந்தன மாதேவி தயார் நமது தந்தையிடம் போராடி நமக்கு வேண்டிய வரங்களை கட்டாயம் பெற்று தருவாள் . நம்பிகையூடு மகா லிங்கத்தை தரிசியுங்கள் . வாழ்க்கையில் பிறவா நிலை எய்துங்கள் . மேலும் தங்களுக்கு விவரங்கள் தேவை என்றால் 9944494045, 9976642060, இந்த எண்ணிற்கு தொடர்ப்பு கொள்ளுங்கள் தேவையான விவரங்கள் கிடைக்கும் . இன்னும் சதுரகிரி பற்றிய விவரங்கள்